மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலு சேர்க்கும் மெர்க்கலின் இந்திய பயணம்
பெங்களூர்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வருகை பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அவர் பெங்களூர் கிளம்பி வருகிறார்.

மோடி நாளை பெங்களூர் வருகிறார். பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நாஸ்காம் நடத்தும் கூட்டத்தில் மோடியும், மெர்க்கலும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஜெர்மனி மற்றும் இந்திய அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். திறன் மேம்பாடு, பயிற்சி, மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மோடியும், மெர்க்கலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் மதிய விருந்தின்போது இந்தியா, ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்கள். இந்தியா-ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுமார் 1, 265 ஜெர்மனி நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளைத் திறந்துள்ளன. அதில் 35 நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications