காஷ்மீரில் ராணுவ நிலையை தாக்கிய 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்தார் செக்டரில் இருக்கும் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள தங்தார் செக்டரில் இருக்கும் ராணுவ நிலை மீது இன்று காலை 7.40 மணி அளவில் மூன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், உள்ளூர்காரர் ஒருவரும் பலியாகினர். சிறிது நேரத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கியால் ராணுவ நிலையை நோக்கி சுட்டனர்.
பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 7 மணி போராட்டத்திற்கு பிறகு ராணுவ வீரர்கள் அந்த 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். தங்தார் ராணுவ நிலையில் 80 வீரர்கள் உள்ளனர்.
முன்னதாக கடநத் வாரம் தீவிரவாதிகளை எதிர்த்து போராடியபோது ராணுவ வீரர் சந்தோஷ் மஹதிக்(38) வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications