மோடி பிறந்தநாளுக்கு கேக் அல்ல 568 கிலோ லட்டு வெட்டிய 2 அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், நக்வி ஆகியோர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை 568 கிலோ லட்டை வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடினார். நாடு முழுவதும் உள்ள பாஜக ஆதரவாளர்கள் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

Ministers celebrate Modi birthday by cutting 568 kg laddu

டெல்லியில் நேற்று ஸ்வச்தா திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மோடியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடினார்கள்.

கேக் வெட்டாமல் 568 கிலோ லட்டை வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். அந்த லட்டில் ஹேப்பி பர்த்டே மோடிஜி என்று எழுதப்பட்டிருந்தது. மோடி தனது பிறந்தநாளை தன்னுடைய தொகுதியான வாரணாசியில் கொண்டாடினார். வாரணாசிக்கு வந்த மோடியை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

பள்ளிக் குழந்தைகளுடன் பேசிய அவர் கேள்வி கேட்க பயப்படவே கூடாது என்று அறிவுரை வழங்கினார். மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+