ஜெ.வை சந்திக்க வந்த அமைச்சர்கள் சம்பத், சண்முகநாதனை திருப்பி அனுப்பிய போலீசார்

Subscribe to Oneindia Tamil

பெங்களுர்: ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள் எம்.சி. சம்பத், சண்முகநாதன் ஆகியோர் இன்று காலை பெங்களூர் சிறைக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுகவினர் என்று ஏராளமானோர் தினமும் சிறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களை சந்திக்க ஜெயலலிதா மறுத்து வருகிறார்.

Ministers Sampath, Shanmuganathan denied permission to meet Jaya

ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிபதி ரத்னகலா செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தார். இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் விசாரணையை வரும் 7ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்திக்க சிறைக்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்ததில் ஈடுபட்டும் பலனில்லை. மேலும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்குமாறு கெஞ்சிப் பார்த்தும் பயனில்லை.

அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+