பெண் பயணியுடன் ‘சில்லறைப் பிரச்சினை’... ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர் மரணம்?
மங்களூர்: பெண் பயணியுடன் ஏற்பட்ட சில்லறைப் பிரச்சினையைத் தொடர்ந்து கர்நாடகாவில் கண்டக்டர் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குருபூரைச் சேர்ந்த தேவதாஸ் ஷெட்டி (42, மங்களூரு - சுப்ரமண்யா இடையே இயக்கப்படும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பணிக்குச் சென்றார் தேவதாஸ். மங்களூருவில் இருந்து சுப்ரமண்யா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது, அலங்கார் அருகே பெண் பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
அவருக்கு டிக்கெட் வழங்கிய தேவதாஸ், மீதி சில்லறையை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் இது தொடர்பாக அப்பெண்ணிற்கும், தேவதாஸிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தான் ரூ. 500 கொடுத்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், ரூ. 100 தான் கொடுத்தார் என தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால், பிரச்சினையை தீர்க்க ராமகுஞ்சா போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளனர். அங்கு போலீசார் இருவரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் கோபம் குறையாத அப்பெண் தனது சகோதரர்களை அழைத்துள்ளாஅர். அவர்கள் தேவதாஸிடம் இருந்து ரூ. 500ஐ பிடுங்கிக் கொண்டு, அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர்.
இந்த சம்பவங்களால் மனமுடைந்த தேவதாஸ், குக்கே சுப்ரமண்யா கோயிலை அடுத்துள்ள குமரதாரா ஆற்றுப் பாலத்துக்கு அருகே பேருந்து சென்ற போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆற்றில் குதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும், பயணிகளும் சுப்ரமண்யா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தேவதாஸைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு மேலாகியும் தேவதாஸின் உடல் கிடைக்காததால் அவரது குடும்பத்தார் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே தேவதாஸின் சில்லறைப் பையை போலீசார் சோதித்தனர். அதில், 'சில்லறை பிரச்சினையால் எனது மானம் போய் விட்டது. இனி வாழ விரும்பவில்லை'' என தேவதாஸ் எழுதிய கடைசிக் கடிதம் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications