உ.பியில் இருந்து கோவாவுக்கு ஏசி பெட்டியில் பயணித்த பசுமாடு
உத்தர பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் கோவா தப்பிச் சென்ற பசு ஒன்று, மீண்டும் அதன் உரிமையாளருடன் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சம்பவம் கோவா கடற்கரையில் நிகழ்ந்துள்ளது.
பானாஜி: உத்தர பிரதேசத்தில் இருந்து கோவாவுக்கு ரயிலில் ஏசி பெட்டியில் பசுமாடு பயணித்துள்ளது. அதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பசு பாதுகாவலர்களுக்கு பயந்து கீழே இறக்கிவிடாமல் கோவா வரை செல்ல அனுமதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. இதையடுத்து, விவசாயி பசு காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையில் திரிந்த பசுவை பற்றிய செய்திகள் வாட்ஸ்ஆப்பில் பரவியது. இதனைக் கண்டுபிடித்த போலீசார், பசுவை அழைத்துவர விவசாயியுடன் கோவா விரைந்தனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இருந்து எப்படி அந்த பசு கோவாவிற்கு வந்தது என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், லக்னோவில் இருந்து ரயில் மூலம் பசு கோவா வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ரயிலில் ஏசி அறையில் பயணம் செய்த பசுவை டிக்கெட் பரிசோதகர் கவனித்துள்ளார். பசுவை கீழே இறக்கவிட்டால், பசு பாதுகாப்பு படையினர் மூலம் தனக்கு ஏதேனும் பிரச்சனை வரலாமென எண்ணிய அவர், பசுவைதொந்தரவு செய்யாமல் விட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பசுவை வீட்டுக்கு அழைத்து செல்ல கோவா சென்ற விவசாயி, பசுவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். ஆனால் பசுவோ அவருடன் செல்ல மறுத்து முரண்டு பிடித்துவருகிறது.
பசுவை வலுக்கட்டாயமாக இழுத்த போதிலும், அது அந்த இடத்தை விட்டு நகராமல் விடாப்பிடியாக அங்கேயே அமர்ந்துவிட்டது.இந்நிலையில், பசுவின் உரிமையாளரான அந்த விவசாயி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications