மாயமான 8 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு… உறவினர் கைது
தானே: கடத்தப்பட்டு காணமல் போன 8 வயது சிறுமி தானே அருகில் உள்ள வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் மாமாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் பெயர் பிரான்சிலா சோபியா வாஸ் என்பதாகும். 8 வயதாகும் இந்த சிறுமி நவி மும்பையில் உள்ள நியூ ஹரிசோன் பப்ளிக் ஸ்கூலில் 3ம் வகுப்பு படித்து வந்தவர் (வயது 8). இவரது தந்தை வேலை நிமித்தமாக நெதர்லாந்துக்குக்கு சென்று உள்ளார்.சோபியா தனது தாயாருடன் குடியிருப்பு ஒன்றில் உள்ளார். குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகளுடன் சோபி பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்து உள்ளார்.

கடந்த திங்கடகிழமை பள்ளிக்கு சென்ற சோபியா திரும்ப வில்லை அவருடன் சென்ற குழந்தைiகள் அனைவரும் திரும்பி விட்டனர்.சோபியாவின் தயாருக்கு சமீபத்தில் தான் ஆபாரேஷன் நடநது உள்ளது அதனால் அவர் ஓய்வாக இருப்பதால் குழந்தை வீடு திரும்பாமல் போனது தாமதமாகவே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திங்கட்கிழமையன்று மாலையில் மகள் மாயமானது பற்றி சிறுமியின் தாயார் போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுமியின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்களால்தான் சிறுமி கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பயந்தர் வனப்பகுதியில் சிறுமி சோபியின் சடலத்தை அழுகிய நிலையிலேயே ராபலே போலீசார் மீட்டுள்ளனர். சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமியை யாரோ கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.
சிறுமியின் மரணம் குறித்து நெதர்லாந்தில் உள்ள அவரது தந்தைக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர் இதனையடுத்து அவர் மும்பைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் மாமா கிளாரன்ஸ் என்பவரை கைது செய்து உள்ளனர். அவர் சிறுமியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது போது கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications