மிசோரம்: ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி- 30 பேர் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிசோரம் மாநிலத்தின் சாய்ரங் பகுதியில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தலைநகர் ஐய்ஸ்வாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

Mizoram: 17 Workers killed in Under Construction Railway bridge collapses

இன்று காலை 10 மணியளவில் திடீரென ரயில்வே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இடிபாடுகளில் இருந்து 17 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். என்ஞ்சிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

பிரதமர் இரங்கல்: மிசோரம் ரயில்வே பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+