பாட்னாவில் லாலு, மமதா பானர்ஜியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் இன்று முதல்வராக பதவியேற்றார். பீகாரில் கூட்டணி ஆட்சி என்பதால் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் இருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். லாலுவின் இளைய மகனுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருக்கிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பாட்னா வந்தடைந்தார். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிதிஷ் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் மமதா.
இச்சந்திப்புகளின் போது தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications