எம்எல்ஏ-க்களுக்கு இரு மடங்கு சம்பளம் உயர்வு...நம்ம ஊரில் இல்ல தெலங்கானாவில் !
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தெலங்கனா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையின் அனைத்து உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் பென்சனை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த வகை செய்யும், சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் அறிமுகம் செய்தார்.
அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவளித்ததையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியதும் விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. தெலங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு இப்போது மாதச் சம்பளம் ரூ.95 ஆயிரமாக உள்ளது.
சம்பள உயர்வு மூலம் இனி மாதச் சம்பளம் ரூ.2 லட்சத்துக்கு 30 ஆயிரமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 42.67 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும் என கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications