For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் குஜராத்தி மொழி பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய ராஜ் தாக்கரே தொண்டர்கள்

குஜராத்தி மொழி பெயர் பலகைகளை ராஜ்தாக்கரே தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

By Mathi
Google Oneindia Tamil News

தானே: மகாராஷ்டிராவில் குஜராத்தி மொழி பெயர் பலகைகளை ராஜ்தாக்கரே தொண்டர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்கிற கோஷத்தைப் போல மோடி இல்லாத இந்தியா என்கிற புதிய முழக்கத்தை ராஜ்தாக்கரே முன்வைத்து வருகிறார்.

MNS workers target Gujarati signboards at shops in Thane

இந்த நிலையில் தானே உள்ளிட்ட சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களில் குஜராத்தி மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ராஜ்தாக்கரே தொண்டர்கள் நேற்று அகற்றினர்.

தானே உள்ளிட்ட பகுதிகள் மகாராஷ்டிராவின் ஒரு பகுதி; குஜராத்தின் ஒரு அங்கம் அல்ல எனவும் அவர்கள் கொதித்து போய் அகற்றினர். மகாராஷ்டிராவில் தொடர்ந்து குஜராத்தி மொழி பலகைகளை ராஜ் தாக்கரே கட்சியினர் அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarati signboards at some commercial establishments were pulled down by activists of the Maharashtra Navnirman Sena (MNS) in Thane district. The cadres of the Raj Thackeray-led party smashed and pulled down over 20 signboards on the Mumbai-Ahmedabad highway in the district's Vasai area late last night, MNS Thane region president Avinash Jadhav said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X