பெங்களூரில் பெண்களை கிண்டல் செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்
பெஙகளூர்: பெங்களூரில் பொது இடத்தில் பெண்களை கிண்டல் செய்த நபரை மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பெங்களூர் ஜே.பி. நகரில் வாலிபர் ஒருவர் பொது இடத்தில் பெண்களை கிண்டல் செய்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர். தர்ம அடி வாங்கிய அந்த நபர் மயங்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இது குறித்து நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள தகவல்,
அடிவாங்கிய நபர் யார் என்று தெரியவில்லை. அவர் தற்போது பேசும் நிலைமையில் இல்லை. அவரது பெயர் புனித் என்று சிலர் கூறுகிறார்கள். அவரை தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோதக் சகோதரிகளை பார்த்துவிட்டு நாமும் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்று மக்கள் இவ்வாறு இரக்கமின்றி தாக்கியுள்ளனர் என்றனர்.
மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் கனகபுரா ரோடு அருகே உள்ள சாரக்கியில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்ததாக ஒருவர் ரெட்டிட்டில் போஸ்ட் செய்துள்ளார்.
அடிவாங்கியவர் யாரையோ பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இது பற்றி செய்தியும் வெளியாகவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது என்று அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications