மேகாலயாவில் பதற்றம்.. முதல்வர் வீட்டை சுற்றி வளைத்த கலவரக்காரர்கள்.. 5 போலீஸார் காயம்

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: மேகாலயா மாநிலம் துராவில் உள்ள முதலமைச்சரின் முகாம் வீட்டிற்கு வெளியே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்தனர். அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது.

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும்,நமது அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில் அமைந்துள்ள மேகாலயா மாநிலம் முற்றிலும் மலைப்பகுதியாக உள்ளவை ஆகும். இமயமலையில் அமைந்துள்ள இந்த பகுதி இயற்கையின் கொடை என்று அழைக்கலாம்

Mob surrounds Meghalaya CM Conrad Kongkal Sangmas residence, 5 security personnel injured in clashes

2023ம் ஆண்டு நடந்த மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. கான்ராட் சங்மா முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். பாஜக ஆதரவு அளித்து வருகிறது.

மேகலாவின் துராவில் முதல்வரின் முகாம் அலுவலகம் அமைந்திருக்கிறது. இங்கு இன்று மாலை மேகாலயா முதல்வர் கான்ராட் சர்மா, ACHIK, GHSMC உள்ளிட்ட சிவில் அமைப்புகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். ஒரு பக்கம் உள்ளே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், மறுபக்கம் வெளியே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 5 போலீசார் காயம் அடைந்தனர்.

முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான கூட்டம் கூடி கற்களை வீசினார்கள். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த பதிலடி கொடுத்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த வன்முறை குறித்து கேள்விப்பட்டு உடனே வந்த முதல்வர் கான்ராட் சர்மா, நேராக வந்து நிலைமையை ஆய்வு செய்தார். தற்போது அங்கு சுமூகமான நிலை காணப்படுகிறது. கல் எறிந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக மேகலயாவில் பதற்றம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+