துர்கா பூஜையா.. பேஷன் ஷோவா.. அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்த மாடல்கள்.. கொந்தளிக்கும் கொல்கத்தா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பெண் மாடல்கள் அரைகுறை ஆடையுடன் துர்கா சிலை முன்பு எடுத்த போட்டோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோயிலுக்கு இப்படித்தான் வருவீங்களா என இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்துக்கள் துர்கா பூஜையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதுவும் கொல்கத்தா மாநிலத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்கத்தா செல்வார்கள். அதன்படி இந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இந்தாண்டும் துர்கா பூஜைக்காக ஏராளமான மக்கள் கொல்கத்தா சென்றுள்ளனர். இந்நிலையில் துர்கா பூஜையில் நடந்த ஒரு செயல் சர்ச்சையாகியுள்ளது.

durga puja fashion model

விநாயகர் சதுர்த்தியை போலவே, துர்கா பூஜைக்காக தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலை வைக்கப்படும். இந்நிலையில் பெண் மாடல்கள் மூன்று பேர் அரைகுறை ஆடையுடன் துர்கா சிலை முன்பு நின்று எடுத்த போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமோஶ்ரீ பத்ரா என்ற பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் கொல்கத்தா பட்டம் வென்ற மாடல் ஆவார். இவர் தன்னுடைய இரண்டு தோழிகளுடன் கொல்கத்தாவில் உள்ள துர்கா பந்தலுக்கு க்ளீவேஜ் தெரிவது போன்ற அரைகுறை ஆடைகளுடன் சென்று வழிபட்டுள்ளார்

மேலும் அந்த உடையுடன் துர்கா சிலை முன்பு போட்டோ எடுத்து, ஹேமோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மூன்று பேருமே அரைகுறை ஆடை, காலணி அணிந்து துர்கா சிலை முன்பு நின்று எடுத்த போட்டோவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. முக்கியமாக ஹேமோஶ்ரீக்கு பாஜக, வலது சாரி அமைப்புகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சன்னதி மித்ரா என்ற மாடல், இதற்கு எதிர்ப்பு வரும் என்று தெரியும். இது சாத்தியமாகும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை. பெண்ணாக இருப்பதால், உடல் குறித்தான விமர்சனம் வரும் என்பதையும் அறிவோம். இருப்பினும் வாழ்க்கை பல புதிய அனுபவங்களை தரும் என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்களும், வலதுசாரிகளும் கடும் கொந்தளிப்புடன் பதிலளித்து வருகின்றனர். எல்லோருக்கும் அவரவர் ஆடையை தேர்வு செய்ய உரிமை உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் கோயிலுக்கு வரும்போது, எப்படிப்பட்ட உடை அணிய வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை அவசியம்.

நீங்கள் மாடலாக இருக்கலாம், வெளிப்படையாக பேசுபவராக இருக்கலாம். முதலில் கடவுளுக்கும், கலாசாரத்துக்கும் மரியாதையளிக்க வேண்டும். இது இந்துக்களின் உணர்வை காயப்படுத்தும் செயல். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமென்ட் செய்துள்ளனர்.

மேலும் சிலர், இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இப்படிப்பட்ட உடையுடன் அந்த மாடல்களை உள்ளே அனுப்பியது யார், அவர்கள் புகைப்படம் எடுக்கும் வரை கோயில் நிர்வாகிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சன்னதி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துர்கா சிலை முன்பு மாடர்ன் டிரஸ் உடன் இருக்கும் படத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார். அதில், தெய்வீகம் என்றடிப்படையில் பாரம்பர்யம், மாடர்ன் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இந்த உண்மையான புரட்சியை புரிந்துகொள்ளாமல் சிலர் கட்டு கதைகள் கட்டலாம். அதைப்பற்றி கவலை இல்லை. என்று கூறியுள்ளார். அவரின் பதிவில் மீண்டும் பலர் எதிர்ப்பு தெரிவித்து கமென்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+