கருப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை, ஆனால் ஒரு பைசாவைக் கூட விட மாட்டேன்: மோடி
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் எவ்வளவு கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று சரியாக தெரியவில்லை. இருப்பினும் அதில் ஒரு பைசா விடாமல் மீட்போம் என்று ரேடியோவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் நடந்த ரேடியோ நிகழ்ச்சி மூலமாக கடந்த மாதம் 3ம் தேதி உரை நிகழ்த்தினார். இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அவர் மக்களிடம் ரோடியோ மூலம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

காதி
நான் மக்களை காதி வாங்குமாறு கடந்த முறை கூறினேன். காதியை வாங்குங்கள் என்றேனே தவிர காதிவாதியாக வேண்டும் என்று நான் கூறவில்லை. காதி விற்பனை 125 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கேள்விப்பட்டேன்.

கெட்டவர்கள்
அனைவரும் கெட்டவர்கள் என்று நினைப்பை மாற்ற வேண்டியது முக்கியமான விஷயம் ஆகும்.

சுத்தம்
மக்கள் தங்கள் நாட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி. தான் ரயிலில் செல்கையில் மக்கள் குப்பைகளை கீழே போடாமல் அதை சேகரித்ததை பார்த்ததாக ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஏழைகள்
சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதன் மூலம் நாம் ஏழைகளுக்கு உதவுகிறோம். ஏழைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். நாம் ஏழைகளுக்கு உதவு வேண்டும். சுற்றுப்புறத்தை அழுக்கடைய விடாமல் செய்வது நாம் ஏழைகளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை ஆகும்.

தீபாவளி
நாட்டு மக்கள் தீபாவளி கொண்டாடியபோது நான் சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் இருந்தேன். அவர்களால் தான் நாம் பண்டிகை கொண்டாட முடிகிறது. அவர்கள் கடுங்குளிரிலும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நம் வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

போதை
போதை பொருளுக்கு மக்கள் அடிமையாவதை உடனே தடுக்க வேண்டும். போதைப் பொருளை எதிர்த்து எந்த அரசு ஊழியராவது ஏதாவது செய்தால் அது குறித்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருப்பு பணம்
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் எவ்வளவு உள்ளது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அதில் ஒரு பைசா விடாமல் மீட்பேன்.

குளிர்காலம்
குளிர்காலம் துவங்கியுள்ளது. உடல் நலத்திற்கு ஏற்ற காலம். அதை அனுபவியுங்கள். நன்றி என்று மோடி தெரிவித்தார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications