மோடியின் அமீரக பயணத்தின் முக்கிய நோக்கம் இதுதான்...!
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாதா தாவூத் இப்ராகிம் குவித்து வைத்துள்ள சொத்துக்களை முடக்கவும், அவருடைய பினாமி சொத்துக்களை முடக்கவும் அமீரக தலைவர்களிடம் பிரதமர் மோடி முக்கியமாக கோரிக்கை வைக்கவுள்ளாராம். அவரது பயணத்தின் இன்னொரு முக்கிய நோக்கம் இதுதான் என்கிறார்கள்.
அபுதாபிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் மோடி இன்று துபாய் போயுள்ளார். அமீரகத்திற்கு 34 ஆண்டு காலத்தில் வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.

பெருமளவிலான முதலீடுகளை கவரும் முக்கிய நோக்கத்தில்தான் மோடி இங்கு வந்துள்ளார். இதை தான் சந்தித்த முதலீட்டாளர்களிடமும் தெளிவாகத் தெரிவித்துள்ளார் மோடி.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய குறிக்கோளும் மோடி பயணத்தில் அடங்கியுள்ளது. அது, தாவூத் இப்ராகிமுக்கு அமீரகத்தில் ஆப்பு வைப்பது என்பதாகும்.
இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமுக்கு எமிரேட்ஸில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவரது நெட்வொர்க்கும் இங்கு வலுவாகவே உள்ளது. அவரது பினாமி பெயர்களில் பெருமளவில் சொத்துக்களும் உள்ளன. இவற்றை முற்றாக முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோடி, அமீரகத் தலைவர்களிடம் வைக்கவுள்ளாராம்.
தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் குறித்த விரிவான பட்டியலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தயாரித்துள்ளார். அவரும் மோடியுடன் அமீரகம் வந்துள்ளார். இந்தப் பட்டியலை அமீரகத் தலைவர்களிடம் மோடி அளித்து நடவடிக்கை எடுக்க கோரவுள்ளாராம்.
தாவூத் பெயரிலும், அவரு பினாமிகளின் பெயரிலும் உள்ள சொத்துக்களை முற்றாக முடக்கி வைக்குமாறு மோடி கோரிக்கை விடுக்கவுள்ளாராம்.
துபாயில் தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் கோல்டன் பாக்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை வைத்துள்ளார். தனது மைத்துனருடன் இணைந்து இதை நடத்தி வருகிறாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications