குஜராத்தை கடக்கப் போகும் ஓகி புயல்... பாஜகவினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

குஜராத் மாநிலத்தை ஓகி புயல் கடக்க உள்ள நிலையில் அம்மாநில பாஜகவினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் மாநிலத்தை ஓகி புயல் கடத்த உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

Modi asks BJP workers to help people as storm approaches Gujarat

ஓகி புயாலால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்தை ஓகி புயல் கடக்க இருக்கிறது. ஆகையால் மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உதவ வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தோளோடு தோள் நின்று உதவ வேண்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, ஓகி புயலிலினால் குஜராத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பாஜகவினரை மாநிலம் முழுவதும் கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்புதருமாறும், அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் உதவுமாறும் மோடி ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+