Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பக்தர்கள் பைத்தியக்காரர்களா? கொந்தளித்த சுப்பிரமணியன் சாமி.. பரபர சண்டை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் மோடியின் பக்தர்கள் என்ன பைத்தியக்காரர்களா? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேட்டுள்ளதோடு, தன்னை விமர்சனம் செய்வோருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பணம் செல்கிறதா? என்பது போல் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

பல ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தை தொடர்ந்து அயோத்தி பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு கிடைத்தது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Modi Bhakts are mentally diseased? Subramanian Swamy raises question on the Ayodhya Ram Temple Row

அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பாபர் மசூதி கட்ட தனியாக இடம் வழங்கவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்டும் பணி தொடங்கியது.

இதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டதோடு, பிரதமர் மோடி 2020ல் அடிக்கல் நாட்டினார். பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கர்ப்பகிரஹத்தில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

‛விடாத பந்தம்’ .. அயோத்தி ராமர் கோவிலுக்கு சீதையின் வீட்டில் இருந்து வரும் சீதனம்! லிஸ்ட் பாருங்க

அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛ராமர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடி தனது மனைவி சீதையை மீட்டார். இப்படியான சூழலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியை பிரதிஷ்டை பூஜை செய்ய ராமர் பக்தர்களான நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஏனென்றால் மோடி தனது மனைவியை கைவிட்டவராக அறியப்படுகிறார். இப்படி இருக்கும்போது அவர் தான் பூஜை செய்வாரா?’’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

மனைவியை கைவிட்ட மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்வதா? சு.சாமி சர்ச்சை

இந்த பதிவை தொடர்ந்து பலரும் சுப்பிரமணியன் சாமியை எக்ஸ் வலைதளத்தில் விமர்சனம் செய்ய தொடங்கினர். சிலர் அவரது குடும்ப விஷயங்களை இழுத்து சாடினர். இந்நிலையில் தான் சுப்பிரமணியன் சாமி கடும் கோபமடைந்துள்ளார். அதோடு அவர் பிரதமர் மோடியின் பக்தர்கள் எனக்கூறி தன்னை விமர்சனம் செய்தவர்களை தாக்கி பேசியுள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‛5 வயது குழந்தை வடிவ ராமர்’’.. அயோத்தி ராமர் கோவிலில் வைக்கப்படும் சிலை இதுதான்.. ஸ்பெஷல் என்ன?

‛‛மோடியின் பக்தர்கள் மனநோயாளிகள் போல் ட்வீட் செய்வது ஏன்? அல்லது பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளர் ஹிரன் ஜோஷியின் கவனத்தை ஈர்க்க மோடி பக்தர்கள் பைத்தியக்காரர்களாக மாறி இப்படி பதிவிடுகிறார்களா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், அவரை எதிர்க்கும் நபர்களை விமர்சித்தும் பதிவிடுவோருக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பணம் செலுத்தப்படுவதாக மறைமுகமாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+