Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛விடாத பந்தம்’ .. அயோத்தி ராமர் கோவிலுக்கு சீதையின் வீட்டில் இருந்து வரும் சீதனம்! லிஸ்ட் பாருங்க

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024 ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி ராமனின் மனைவியான சீதையின் வீட்டில் இருந்து ஆபரணம் முதல் ஆடை வரை சீதனமாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அயோத்தி.. இந்தியாவின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றான இது சர்ச்சைக்குக்கும் பெயர் பெற்றது. உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Various gifts including oranaments comes from Sitas birth place Nepals Janakpur to Ayodhyas Ram Temple

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.

மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக கோவில் அமைய உள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் ராமனின் மனைவியான சீதையின் வீட்டில் இருந்து சீதனமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆபரணம் முதல் ஆடை வரை அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதாவது சீதை பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் பிறந்தததாகவும், நேபாளம் மாநிலம் ஜனக்பூரில் பிறந்ததாகவும் 2 விதமான கருத்துகள் உள்ளன. இந்த 2 இடங்களிலும் சீதைக்கு கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சீதையின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி சீதனம் கொண்டு வரப்பட உள்ளது. வனவாசம் காரணமாக ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என புராணங்களில் கூறப்படுகிறது. ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் நிலையில் சீதையின் இல்லத்துக்கு (ராமர் கோவில்) சீதனம் அனுப்புவதாக ஜனக்பூரை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 500க்கும் அதிகமானவர்கள் ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு வருகின்றனர். இவர்கள் ஜனவரி 3ம் தேதி புறப்பட்டு வருகின்றனர். அப்போது சீதனமாக பழங்கள், இனிப்பு வகைகள், வேஷ்டி சட்டை உள்ளிட்ட உடைகள் மற்றும் ஆபரணங்களை எடுத்து வருகின்றனர். ஜனக்பூரில் இருந்து புறப்படும் இவர்கள் நேபாளத்தின் சந்திரபூர் வழியாக ரக்சல், பெட்டியா சென்று இரவில் ஓய்வு எடுக்கின்றனர். அதன்பிறகு குஷிநகர், கோரக்பூர் வழியாக அயோத்திக்கு ஜனவரி 5ம் தேதி வந்து ஓய்வு எடுக்கின்றனர். அதன்பிறகு ஜனவரி 6ம் தேதி அவர்கள் சீதனமாக கொண்டு வந்த பொருட்களை ராம் ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்க உள்ளனர்.

இதுதொடர்பாக ஜனக்பூரில் ராமர் ஜானகி கோவிலை சேர்ந்த மஹந்த் ரோஷன் தாஸ் கூறுகையில், ‛‛இதுதொடர்பாக நேபாள அரசு அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகளை 5 முறை சந்தித்து ஆலோசனை செய்துள்ளோம். ராம ஜென்மபூமி அறக்கட்டளையுடனும் பேசி சீதை பிறந்த வீட்டில் நிலத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல உள்ளோம்’’ என்றார். மேலும் இதுபற்றி மாதேஷ் பிரதேச வர்த்தக சபையின் தலைவர் பவன் தாக்கூர் கூறுகையில், ‛‛நேபாளம் முழுவதும் குறிப்பாக ஜானக்பூரில் இருந்து சீதையின் புதிய இல்லத்துக்கு (ராமர் கோவில்) பரிசாக பொருட்களை அனுப்ப வர்த்தக சபையில் இருந்து எடுத்துள்ளோம். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது’’ என்றார்.

முன்னதாக நோபாளின் காலிகண்டகி ஆற்றுப்படுகையில் இருந்து சாலிகிராம் கல் ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கல்லில் செதுக்கப்பட்ட ராமர் சிலை தான் ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+