60 ஆண்டுகாலம் ஒன்றும் செய்யாதவர்கள் என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள்: காங்.மீது மோடி தாக்கு
Subscribe to Oneindia Tamil
சண்டிகார்: நாட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஒன்றுமே செய்யாதவர்கள் என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வருகிற 15-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:
- ஹரியானாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான தருணம் வந்துவிட்டது.
- ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மாநிலத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாகும்.
- ஹரியானா மாநிலம் வளர்ச்சிபெற இங்கு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை.
- மானசரோவருக்கு செல்ல இரண்டாவது வழியை திறக்க சீனாவை சம்மதிக்க செய்தது பாரதிய ஜனதா அரசாகும். 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.
- நாட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஒன்றுமே செய்யாதவர்கள் என்னிடம் நான் கடந்த சிலமாதங்களாக செய்த பணிக்கு என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள். அவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்.
- பாசுமதி அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் உண்மை என்றால் ஹரியானா காங்கிரஸ் அரசே ஏற்றுமதிக்கு 4% வரியை ஏற்றியுள்ளது.
- ஹரியானா போலீஸ் என்னுடைய கருத்தை கேட்கமாட்டார்கள், அவர்கள் காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
- ஹரியானா வளர்ச்சி பெற வேண்டும் என்றால், நீங்கள் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசை வெளியேற்ற வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக 'பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்', 'பிரதமர் ஜன் தன் யோஜனா ஆகியவற்றை நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். நான் உங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றால், நீங்கள் ஹரியானாவில் நிலையான அரசை கொடுக்க வேண்டும்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications