குஜராத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு
காந்திநகர்: நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் அடுத்ததாக யாரை முதல்வர் பதவிக்கு கொண்டு வருவது என்பதுகுறித்து ஆலோசிக்க பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி தற்போது குஜராத் மாநில முதல்வராகவும் பதவி வகித்துவருகிறார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை மாலை, குஜராத் தலைநகர் காந்திநகரில் பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை நரேந்திர மோடி கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில் மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெறுகின்றன. அடுத்த முதல்வருக்கான போட்டியில், தற்போதைய வருவாய் துறை அமைச்சர் ஆனந்திபேன் பட்டேல், தொழில்துறை அமைச்சர் சுரப் பட்டேல், குஜராத்தின் பாஜக ஒருங்கிணைப்பு செயலாளர் பிக்கு தல்சானியா ஆகியோர் உள்ளனர்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களை கேட்டால்,. நாளைய கூட்டம், வழக்கமான ஒன்றுதான். இரு வாரங்களுக்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமைகளில் எம்.எல்.ஏக்களை சந்திப்பது மோடியின் வழக்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் இம்முறை நடைபெறும் கூட்டத்தில் அடுத்த முதல்வருக்கான விவாதம்தான் முக்கிய இடம் பிடிக்கும் என்ற சந்தேகத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.












Click it and Unblock the Notifications