பொருளாதார பிரச்சனைகள் குறித்து மோடி பேசுவதே இல்லையே.. ஏன்: ப.சிதம்பரம்
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியை விட பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியால் அதிக வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:
நாடு விடுதலை அடைந்தது முதல் ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகபட்ச வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது;

சர்வதேச பொருளாதாரம் நெருக்கடியில் இருந்த போதும் நமது பொருளாதாரம் 6.6% வளர்ச்சியை கொண்டதாக இருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளில் இந்தியாவின் வர்த்தகம் மற்ற நாடுகளை விட 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது;
குஜராத் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் கிடையாது. அதிக முதலீடுகளை கவருவதற்காக அப்படி சொல்லப்படுகிறது. புள்ளிவிபர அடிப்படையில் மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, தமிழகம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்கள்தான் அதிக முதலீடுகளை கொண்டவை.
நரேந்திர மோடி 10% பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவேன் என்கிறார். அது எப்படி சாத்தியமாகும்? சீனா கூட இன்னும் 10% பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லையே.. அரை டஜன் நாடுகள்தான் 5% பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி இருக்கின்றன.
நாட்டின் முக்கிய பொருளாதார பிரச்சனைகள் குறித்து மோடி பேசுவதே இல்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஜி.எஸ்.டி., டி.டி.சி போன்ற பொருளாதார விஷயங்களை மோடி ஊடகங்களிடம் விவாதிப்பதும் இல்லை. இது போன்ற பொருளாதார விவகாரங்களில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications