For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை திரும்பபெறப்பட்டது.. பின் வாங்கிய மோடி!

பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை பிரதமர் மோடியால் திரும்பபெறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    போலி செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர் தொடர்பான ஆணை திரும்பபெறப்பட்டது

    டெல்லி: பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை பிரதமர் மோடியால் திரும்பபெறப்பட்டு இருக்கிறது.

    தற்போது உலகம் முழுக்க பொய்யான செய்திகள் அதிகம் வலம் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது போன்ற செய்திகள் தேர்தல் முடிவுகளில் அதிக பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பொய் செய்திகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. இதற்கு பல பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்த சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

    நான்கு பாரா அறிக்கை

    நான்கு பாரா அறிக்கை

    நேற்று மாலை மத்திய அரசு நான்கு பாரா கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி பொய்யான செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பொய்யான செய்திகள் வெளியாவதை தடுக்கும் வண்ணம் இந்த அறிக்கை வெளியானது. இதில் 15 நாட்களில் முடிவெடுக்கும் படி அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

    என்ன தண்டனை

    என்ன தண்டனை

    இந்த ஆணையின் படி ஒரு பத்திரிக்கையாளர் பொய்யான செய்தி வெளியிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பத்திரிக்கை துறையில் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். மேலும் அரசு நிகழ்வுகள் குறித்த செய்திகள், அமைச்சர்களை பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட முடியாமல் போய்விடும். இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரம்

    மத்திய அரசின் இந்த ஆணைக்கு பல கட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். எப்படி மத்திய அரசு தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ஆணையை கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி கேட்டது. இது பத்திரிக்கையாளர்களை தேவையில்லாமல் கைது செய்து அவர்களை முடக்க வழிவகை செய்யும் என்றும் கூறப்பட்டது.

    மாற்றினார்கள்

    மாற்றினார்கள்

    இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் இந்த ஆணை திரும்ப பெறப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி இந்த ஆணையை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறார். பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த காரணத்தால் இந்த ஆணையை திரும்ப பெற்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    English summary
    Modi cancels his order on Fake News Journalism issue after series of controversies. Initially, he issued a note, which gives power to take action against fake news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X