தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்!
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் ஒருமனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லியில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுகவின் கணேசமூர்த்தி, பாமகவின் அன்புமணி ராமதாஸ், புதுவை முதல்வர் ரங்கசாமி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் உட்பட 29 கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் பிரகாஷ்சிங் பாதல், சந்திரபாபு நாயுடு, பாஸ்வான், உத்தவ் தாக்கரே ஆகியோர் மோடிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு தமது உரையில், இந்த நாடு உங்களது தலைமைக்காக காத்திருக்கிறது.. வாருங்கள் வந்து தூய்மைப்படுத்துவோம் என்றார்.
பின்னர் வாழ்த்து தெரிவித்த அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications