மத்திய அரசு விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்... காங்கிரஸ் கொந்தளிப்பு
டெல்லி: மத்திய அரசின் ஆட்சி மொழி விருதுகளில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை அமல்படுத்தற்காக, உள்துறை அமைச்சகத்தில் ‘ராஜ்பாஷா விபாக்' என்ற பிரிவு இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஆண்டுதோறும், இந்திராகாந்தி பாஷா புரஸ்கார் (இந்திராகாந்தி ஆட்சிமொழி விருது) மற்றும் ராஜீவ்காந்தி ராஜ்பாஷா புரஸ்கார் (ராஜீவ்காந்தி ஆட்சிமொழி விருது) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த விருதுகளின் பெயர்களை ‘ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்' (ஆட்சிமொழி புகழ் விருது) மற்றும் ராஜ்பாஷா கவுரவ் புரஸ்கார் (ஆட்சிமொழி மாண்பு விருது) என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகம், குடியரசு தலைவர் செயலகம் உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழித்துறை அனுப்பியது. மேலும், இதனை சாதனை அறிக்கை கையேட்டிலும் குறிப்பிடப்பட்டது.
இந்த விருதுகளை வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி அன்று குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜுஜு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விருதுகளில் முன்னாள் பிரதமர்களின் பெயர்களை நீக்கியது மத்திய அரசு நிர்வாக ரீதியாக எடுத்த நடவடிக்கை என்றும், இதில் அரசியல் தொடர்பு இல்லை' என்றும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், விருதுகளில் பெயர் நீக்கம் செய்யப் பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ‘மோடி அரசு மிகவும் குறுகிய நோக்குடனும், அரசியல் காரணங்களாலும் இதுபோன்ற சிறுமையான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக'வும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications