ரயில்வே துறையை முற்றிலும் மாற்றும் வகையில் ரூ.8.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்
டெல்லி: ரயில்வே துறையின் முகத்தையை மாற்றியமைக்கும் வகையில் 8.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
வருடாந்திர ஆட்டோமோட்டிவ் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்க ஆண்டு கூட்டத்தில் இன்று, பங்கேற்று ஜெயந்த் சின்ஹா பேசியதாவது: இந்திய ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் ரயில்வே துறை முகத்தையே இந்த முதலீடு மாற்றியமைக்கும். பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும்.

சாலை போக்குவரத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை இரட்டிப்பு செய்யவும் முடிவு செய்துள்ளோம். ஜிஎஸ்டி வரி சட்டத்திற்கு அனுமதி கிடைத்தால், மத்திய அரசுக்கு நிதி ஆதாரம் மேலும் அதிகம் கிடைக்கும். அச்சட்டத்தை நிறைவேற்ற பிற கட்சிகளுடன் கலந்து பேசி ஆதரவு கோரப்படும்.
மேக் இன் இந்தியா, கோஷத்தின்கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க வாய்ப்பு வசதிகள் அதிகரித்து கொடுக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications