என் நட்பை மோடி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்... அகமது படேல்
டெல்லி: மோடி எப்படி எனக்கு நண்பராவார்? அவருடன் நான் நட்பாக இருப்பதை நிரூபித்தால் அரசியல் வாழ்க்கை விட்டு விலகத்தயார் என்று சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது கூறியுள்ளார்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமொடி சமீபத்தில் தூர்தர்ஷனுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் எனக்கு நல்ல நண்பர் காங்கிரஸ் கட்சியில் நான் கொண்டுள்ள சிறந்த நண்பர்களில் அகமத்படேலும் ஒருவர், என கூறினார்.
இதற்கு இன்றுபதில் அளித்த அகமது படேல் மோடியின் கருத்தை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
மோடியை நான் 1980ம் ஆண்டில் ஒரே ஒருமுறைதான் நேரில் சந்தித்துள்ளேன் அதுவும் எனது தலைவருக்கு தெரியும்.
தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் ரீதியாகவோ நான் அவரிடம் எதுவும் கேட்டதில்லை.
மோடி கூறுவது அபத்தமானது, ஆதாரமற்றது மோடிக்கு அவரது சொந்த கட்சியிலேயே நண்பர்கள் கிடையாது பின் எப்படி நான் அவருக்கு நண்பராக இருக்க முடியும்?.
மோடி கூறியதை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டுவிலகுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லவேளை விஜயகாந்த் பாணியில் நானும், மோடியும் கோலி குண்டு விளையாடினோமா? என்று கேட்காமல் விட்டாரே அகமது படேல்.












Click it and Unblock the Notifications