கர்நாடகாவில் தேர்தல்.. நேபாளில் சிறப்பு பூஜை.. மோடியின் புதிய செண்டிமெண்ட்!
கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று நடக்க இருக்கும் நிலையில் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி நேபாளில் சிறப்பு பூஜை நடத்தி வருகிறார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று நடக்க இருக்கும் நிலையில் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி நேபாளில் சிறப்பு பூஜை நடத்தி வருகிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சிகள் ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது. எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி கர்நாடகாவில் மொத்த 18 இடங்களில் மேடை அமைத்து பேசினார்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்று இருக்கிறார். நேற்று நேபாளம் சென்ற அவர் நிறைய கோவில்களில் வழிபாடு நடத்தினார். முக்கியமாக நேற்று உலக புகழ்பெற்ற ஜனகாபூர் ஜானகி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
Prime Minister Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple. pic.twitter.com/Gba16qACyd
— ANI (@ANI) May 12, 2018
இந்த நிலையில் இன்று பசுபதி நாத், முக்திநாத் என்ற இரண்டு கோவில்களுக்கு சென்று பூஜை நடத்தி வருகிறார். இதில் பசுபதி நாத் லிங்க வடிவில் இருக்கும் சிவன் ஆகும். கர்நாடகாவில் லிங்காயத்துகள் வழிபடும் சிவ வடிவங்களில் பசுபதி நாத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் இருந்து ஒரே இடத்தில் அமர்ந்து அவர் சிறப்பு பூஜை நடத்தி வருகிறார். இதற்கான சிறப்பு யாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பூஜை லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
#WATCH Prime Minister Narendra Modi offered prayers at #Nepal's Muktinath Temple. pic.twitter.com/ZwixAllkiW
— ANI (@ANI) May 12, 2018
மோடி முதல்முறை தேர்தல் ஒன்று நடக்கும் போது அறிக்கை எதுவும் கொடுக்காமல், பூஜை நடத்திக் கொண்டு இருக்கிறார். மோடி தோல்வி பயத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications