நேபாளத்தின் முக்திநாத் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன இடத்தில் டிரம்ஸ் அடித்து மகிழ்ந்த மோடி!
நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பாரம்பரிய ட்ரம்ஸை அடித்து மகிழ்ந்தார்.
காத்மாண்டு: நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பாரம்பரிய ட்ரம்ஸை அடித்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று காலை நேபாளம் சென்றார். இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.

நேபாளத்தில் மோடி
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜனக்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி இடையிலான பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.

முக்திநாத் கோவிலில் மோடி
இரண்டாம் நாளான இன்று காலையிலேயே முக்திநாத் கோயிலுக்கு சென்ற மோடி ஸ்வாமிக்கு ஆதராதனை காட்டி வழிபட்டார். அங்குள்ள மக்கள் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றனர்.
|
ட்ரம்ஸ் அடித்து மகிழ்ந்த மோடி
கோயிலில் திரண்டிருந்த மக்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். நேபாள மக்கள் கொடுத்த அன்பளிப்பு பொருட்களையும் அவர் பெற்று கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய ட்ரம்ஸையும் அவர் அடித்து மகிழ்ந்தார்.

இன்று திரும்புகிறார்
நண்பகலில் நேபாள அரசியல் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி காத்மண்டு மேயர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் இன்று மாலையே பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications