கூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி - புடின் சந்திப்பில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!
பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார்.
இதில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முக்கியமாக மேலும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது.

8 முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம்
இந்த சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தான அதே சமயம் முக்கியமான சில ஆவணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்டு ரகசியம் போல உள்ள 8 ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது இரண்டு உறவுகளை இன்னும் பலப்படுத்தும்.

அணு உலை
இதில் எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அடுத்து இன்னொரு முக்கியமான ஒப்பந்தம் என்றால் அது அணு உலை ஒப்பந்தம்தான். தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவில் 12 அணு உலைகளை ரஷ்யா அமைக்க உள்ளது.

ஸ்பேஸ் மிஷன்
இது இல்லாமல் விண்வெளி ஆராய்ச்சியிலும் ரஷ்யா உதவ உள்ளது. இந்தியாவின் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றையும் அமைக்க இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

வேறு என்ன
அது மட்டுமில்லாமல், விவசாய துறையில் ஒரு ஒப்பந்தமும், மருத்துவ துறையில் 2 ஒப்பந்தமும், வணிகம் தொடர்பாக 3 ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. மேலும் ரயில்வே தொடர்பாக 2 ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications