பாஜக கூட்டணியில் தேமுதிக: போனில் வாழ்த்திய அன்புமணி, வைகோ... நன்றி சொன்ன மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜகாந்திற்கு கூட்டணியில் உள்ள பிறக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி விஜயகாந்திற்கு கூட்டணியில் இணைந்ததற்காக போனில் நன்றித் தெரிவித்தனராம்.

நடைபெற உள்ள 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் முதன்முறையாக ஐந்து முனைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

Modi, Rajnath wishes Vijayakanth

பாஜக கூட்டணித் தவிர மற்றக் கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளார்கள் பெயர்களை அறிவித்துவிட்டன.

ஆனால், பாஜக கூட்டணியில் மட்டும் தொடர்ந்து இழுபறி நீடித்தது. காரணம் அக்கூட்டணியில் தேமுதிக கேட்கும் சிலத் தொகுதிகளை, மற்றொருக் கூட்டணிக் கட்சியான பாமகவும் கேட்டு வருவது தான் எனச் சொல்லப் பட்டது.

இதற்கிடையே கூட்டணி இறுதியாகாத நிலையில் வேட்பாளர்கள் முடிவு செய்யப் படாத நிலையில் கடந்த வெள்ளியன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க தேமுதிக தலைவர் முடிவு செய்திருந்தார் விஜயகாந்த்.

ஆனால் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அதிரடியாக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனால் பாஜக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. அதில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டதையடுத்து கூட்டணிக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்ததற்காக விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அவர் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார்கள்.

இதேபோல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+