இறந்துவிட்டால் சட்டவிரோதம் இல்லை; பிழைத்துக் கொண்டால் அது சட்ட விரோதம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள சில முட்டாள்தனமான சட்டங்களை திருத்துமாறு குழு ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆனதை கொண்டாடுகிறது. இந்நிலையில் மோடி நாட்டில் உள்ள முட்டாள்தனமான சட்டங்களை திருத்துமாறு குழு ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சட்டங்களில் முட்டாள்தனமான, தேவையில்லாத சட்டங்களை தேடிக் கண்டுபிடிப்பதே அந்த குழுவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இந்தியாவில் உள்ள சில முட்டாள்தனமான, தேவையில்லாத சட்டங்களில் சில,
- கிழக்கு பஞ்சாப் விவசாய பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகள் சட்டம் 1949: இந்த சட்டத்தின்படி டெல்லி நகருக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் மேளம் தட்டி அதை விரட்டுங்கள் என்று அரசு தெரிவித்து அதை ஏற்காவிட்டால் டெல்லிக்காரர்கள் ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும்.
- இந்திய விமான சட்டம் 1934: உரிமம் இல்லாமல் பட்டம் விட்டால் கைது தான். இந்தியாவில் ஒருவர் பட்டம் செய்ய, வைத்துக் கொள்ள, விற்பனை செய்ய, பறக்க விட உரிமம் தேவை. இந்த விதிமுறை விமானத்திற்கும் பொருந்தும்.
- பொழுதுபோக்கு இடங்கள் கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டம் 1960: ஒரே இடத்தில் 10 ஜோடிகளுக்கு மேல் ஆடினால் அவர்கள் கைது செய்யப்படலாம்.
- இந்திய புதையல் சட்டம் 1878: உங்களுக்கு ரூ.10 உள்பட எந்த புதையல் கிடைத்தாலும் அதை போலீசில் தெரிவிக்காவிட்டால் சிறை தான்.

- அரசு ரகசியங்கள் சட்டம் 1923: அரசு அலுவலகங்கள் குறித்த தகவல்களை கசியவிடும் அதிகாரிகள், பொது மக்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
- இந்திய மெஜாரிட்டி சட்டம் 1875: எந்த ஒரு ஆணும் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய முடியாது. ஆனால் 18 வயதில் தந்தை ஆகலாம். அதாவது 18 வயது நிரம்பிய ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்.
- இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 497: திருமணமான பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அதே சமயம் திருமணமான ஆண் அதுவும் மாற்றான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணமான ஆண்கள் கன்னிப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அது சட்டவிரோதம் ஆகாது.
- இந்திய தண்டனை சட்டம் 309: தற்கொலை செய்து இறந்துவிட்டால் அது சட்டவிரோதம் இல்லை. ஆனால் பிழைத்துக் கொண்டால் அது சட்ட விரோதம். அதவாது தற்கொலைக்கு முயற்சி செய்வது சட்ட விரோதம்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications