பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகார், ஜார்க்கண்ட், உத்தர்காண்ட் அரசுகள் கலைப்பு?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மத்தியில் புதிய அரசு அமைந்தால் பீகார், ஜார்க்கண்ட், உத்தர்காண்ட் மாநில அரசுகள் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் 7 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரையிலான கருத்து கணிப்புகள் அனைத்துமே பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன.
இந்த நிலையில் மத்தியில் பாஜக அரசு அமைந்தால் கூட்டணிகள் தயவில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பீகார், ஜார்க்கண்ட், உத்தர்காண்ட் மாநில அரசுகள் கலைக்கப்படும் நிலைமை உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

3 மாநிலங்களில் 2009ல் பாஜக
2009 லோக்சபா தேர்தலில் உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் பீகாரில் 12, ஜார்க்கண்டில் 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது.

இந்த தேர்தலில்..
தற்போதைய தேர்தலில் உத்தர்காண்ட்டில் 5 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டுகிறது. பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களைக் கைப்பற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வென்ற 8 தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளவும் பாஜக போராடிக் கொண்டிருக்கிறது.

பீகார் நிலவரம்..
இதில் பீகார் மாநிலத்தில் 243 எம்.எல்.ஏக்களளக் கொண்ட சட்டசபையில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 117 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 4 சுயேட்சைகள், ஒரு சி.பி.ஐ. வேட்பாளர் ஆதரவுடன்தான் நிதிஷ்குமார் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் 5 பேரை கட்சி விரோத நடவடிக்கைகாக நீக்கியும் வைத்திருக்கிறார். இதனால் பாஜக ஆட்சி அமைத்தால் நிச்சயம் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் என்று புலம்பி வருகின்றனர் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள். இதை நிதிஷ்குமாரும் , லோக்சபா தேர்தல் முடிவுகள் பீகாரில் எதிரொலிக்கும் என்று கூறி வருகிறார்.
பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில்தான் முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் பீகார் சிறுபான்மை அரசு கலைக்கப்பட்டு சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

உத்தர்காண்ட்
70 எம்.எல்.ஏக்களைக் கொண்ட உத்தர்காண்ட் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 32 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது முன்னேற்ற ஜனநாயக முன்னணியின் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசு நிலைத்துக் கொண்டிருக்கிறது. அனேகமாக இந்த அணியினர் பாஜகவுக்கு தாவக் கூடிய வாய்ப்பிருக்கிறது. இதனால் உத்தர்காண்ட் அரசும் கவிழும் நிலை வரும்.

ஜார்க்கண்ட்
79 எம்..எல்.ஏக்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி அரசும் ஒரு சீட் மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருக்கிறது. இதனால் இம்மாநில அரசும் நிச்சயம் கவிழக் கூடும் என்றே கூறப்படுகிறது.

3 சட்டசபை தேர்தல்கள்.
லோக்சபா தேர்தல் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு மத்தியில் பாஜக அரசு அமைந்தால் நிச்சயமாக இந்த மூன்று மாநிலங்களும் சட்டசபை தேர்தல் களத்துக்குத்தான் போகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications