பூடான் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சில் தவறுகள்: ட்விட்டரில் கலாய்க்கும் மக்கள்
டெல்லி: பூடான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பூடான் என்பதற்கு பதிலாக நேபாள் என்று வாய் தவறி கூறியது பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் சென்றார். பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோடி பூடான் நாடாளுமன்றத்தில் இன்று காலை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பூடான் என்று கூறுவதற்கு பதில் வாய் தவறி நேபாள் என்றது குறித்து பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். அதில் சில ட்வீட்களை பார்ப்போம்.
|
தவறு
பிரதமர் மோடி பூடானை நேபாள் என்று கூறியுள்ளார், சிரிப்பை அடக்க முடியவில்லை. என்ன ஒரு மாபெரும் தவறு என்று மிஹிர் பாத்யே என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
மோடி
இன்று மோடி பூடானை நேபாள் என்று கூறியுள்ளார். அவர் ஐ.நா. மற்றும் பிரிக் மாநாட்டில் இந்தியாவை நெளிய வைக்க மாட்டார் என்று நம்புவோம் என ஜெயேஷ் ஷிண்டே என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மனிதன் தானே
பூடான் நாடாளுமன்றத்திற்குள் நின்று கொண்டு பூடானை நேபாள் என்று மோடி கூறியிருப்பது அவரும் மனிதர் தான், தவறுகள் செய்யத் தான் செய்வார் என்பதை காண்பிக்கிறது என வசந்த் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
|
கண்டனம்
பூடானில் டிம் மோடி உரை, நேபாள், லடாக்கை போட்டு குழப்பியது, பூடான் ஜனநாயக நாடானதற்கு கண்டனம் தெரிவித்தது என சூர்யநாராயண் கணேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
|
புவிவியல்
தயவு செய்து தற்போதாவது மோடி புவியியலை கற்கட்டும். ஆனால் டாக்சிலா பீகாரில் இருக்கிறது என்று நினைப்பவரிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது என அபினவ் சர்மா தெரிவித்துள்ளார்.
|
குஜராத்தி
ஒருவேளை குஜராத்தியில் பூடானை நேபாள் என்பார்களோ? என ப்ரம்பி என்பவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications