பிரதமரின் கழிவறைத் திட்டம்.. ரூ. 200 கோடி நிதி தருவதாக டிசிஎஸ், பார்தி அறிவிப்பு!
டெல்லி: பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின்போது பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளைக் கட்ட நிதியுதவி தாருங்கள் என்று விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.
நாங்கள் ரூ. 200 கோடி தருகிறோம் என்று டாடா கன்சல்டன்சி நிறுவனமும், பார்தி அறக்கட்டளையும் அறிவித்துள்ளன.
பிரதமரின் தனது சுதந்திர தின உரையின் போது விடுத்த அழைப்பை ஏற்று அன்றைய தினமே ஓரியண்டல் காமரஸ் வங்கி, கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தனித்தனியாக 200 கழிவறைகள் கட்ட 2 கோடி ரூபாயை வழங்கியது.

10,000 பள்ளிகளுக்கு டிசிஎஸ் உதவி
இந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம், நாடு முழுவதும் 10 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்ட ரூ. 100 கோடி தருவதாக அறிவித்துள்ளது.

பெண் மாணவிகளின் சுகாதாரம்
அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பெண் மாணவிகளுக்கான சுகாதாரமான கழிவறை வசதி செய்து தருவதன் மூலம் கல்வியில் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளதை கருதி இந்த நிதியுதவியை வழங்குவதாக டாடா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பார்தி டெலிகாம்... ரூ. 100 கோடி
அதே போல் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி அறக்கட்டளை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்காக தத்தெடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது. அங்குள்ள பள்ளிகளில் கழிவறை கட்டுவதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நான்கு நாட்களுக்குள்
மோடி அழைப்பு விடுத்த நான்கு நாட்களுக்குள் ரூ. 200 கோடி அளவுக்கு நிதி குவி்ந்திருப்பது மத்திய அரசை குஷிப்படுத்தியுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில்
பார்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும். அதன் பின்னர் லூதியானா மாவட்டப் பள்ளிகள் அனைத்தும் கழிப்பறைகளுடன் கூடிய முதல் மாவட்டமாக நாட்டில் உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications