மோடி மட்டும் அழவில்லை... இவர்களும் அழுதவர்கள்தான்!!
பிரதமர் மோடி அழுதது நாடகம் என்று அரசியல் தலைவர்கள் கூறி வரும் நிலையில் மோடியைப் போல பல அரசியல் தலைவர்கள் கண்ணீர் விட்டு அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவா: கண்ணீர் மிகப்பெரிய ஆயுதம். இது பெண்களில் ஆயுதம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆண்கள் அழக்கூடாது என்று கூறி வைத்துள்ளனர். ஆனால் இன்றைக்கு பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள்வரை பொது இடங்களில் மக்கள் முன்னிலையில் பல இடங்களில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.
உலக நாடுகளிடையே இந்தியாவின் ஜனநாயகம் பிரமிப்பை தருகிறது என்று கூறிய மோடி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன் என்றார். அப்போது பேசிய மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவருக்கு அழுகை வந்தது. இருப்பினும் தம்மை தேற்றிக்கொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது ஓரிரு நிமிடங்களுக்கு அவரது குரல் தழுதழுத்தது அதவே பரபரப்பாக பேசப்பட்டது.

அமெரிக்காவில் அழுத மோடி
அமெரிக்காவின் சான் ஜோஸில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் ஜூகர்பெர்க் இடையிலான சந்திப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. பிரதமர் மோடியிடம், ஜூகர்பெர்க் உங்களுடைய தாயாரை பற்றிகூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடி தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்கள் தொடர்பாக பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.

மேடையில் அழுத மோடி
தன்னை உயிரோடு எரித்தாலும் கூட கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்க முடியாது என ஆவேசமுடன் தெரிவித்த பிரதமர் மோடி, இன்னும் 50 நாட்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊழல் செய்தவர்களின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவேன் என உறுதிபடக்கூறினார். அடுத்த மாதம் 30ம் தேதிக்குப் பிறகு தன்னுடைய இந்த திட்டம் தவறு என நிரூபணமானால், அதற்காக எந்த ஒரு தண்டனையையும் ஏற்கவும் தான் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கலங்கிய மோடி
எனக்கு எதிராக திரண்டிருக்கும் சக்திகளை பற்றி எனக்கு தெரியும். அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள். 70 ஆண்டுகளாக கொள்ளையடித்து சேர்த்துவைத்த பணத்துக்கு ஆபத்து என்பதால் அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள் என்று பேசும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அவர் கண் கலங்கினார். இது நாடகம் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பிரதமர் மோடியைப் போல அரசியல் தலைவர்கள் பொது இடத்தில் கண் கலங்கியுள்ளனர்.

துரைமுருகன் கண்ணீர்
சட்டசபை தேர்தலின் போது காட்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவர், எல்லோருக்கும் வரக்கூடிய முடிவு எனக்கும் ஒருநாள் வரும். என்னை தூக்கிக் கொண்டு போகும், போது நீங்கள் நான் செய்ததை நினைத்து கண்ணீர் சிந்துவீர்களே, அது ஒன்று போதும்.
என்று கூறி கண்ணீர் விட்டு விம்மியழுதார்.

சசிகலா புஷ்பா
என் கட்சித்தலைவர் என்னை அடித்தார்... என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகோவின் அழுகை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுவிடுவார். கடந்த 2006ம் ஆண்டு மதிமுக இரண்டாக உடைந்த போது நடந்த கூட்டத்தில் பேசிய வைகோ அழுதார். அவ்வப்போது அழுது பரபரப்பை ஏற்படுத்துவார் வைகோ.

பதவியேற்பில் அழுதவர்கள்
கடந்த 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அமைச்சர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். கண்ணீர் மல்க பதவியேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கோகுல இந்திரா, வளர்மதி, முக்கூர் சுப்ரமணியன் ஆகியோர் குலுங்கி குலுங்கி அழுதனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications