பாதுகாப்பு விவகாரம்: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடி மனைவி மேல்முறையீடு
அகமதாபாத்: தனது பாதுகாப்பு குறித்து தான் கோரிய விவரங்களைத் தர குஜராத் காவல் துறை மறுத்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக குஜராத்தின் மேஹ்ஸனா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:

நான் பிரதமரின் மனைவி. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களையும், அது குறித்த அரசு உத்தரவு நகல்களையும் தரக்கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மாவட்டக் காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தேன்.
நான் கோரிய விவரங்கள், மாநில உளவுத் துறைக்குத் தொடர்புடையவை என்றும், குஜராத் உள்துறையின் தீர்மானத்தின்படி, தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து மாநில உளவுத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அவற்றைத் தர முடியாது என்றும் துணை கண்காணிப்பாளர் பதில் அனுப்பியுள்ளார்.
ஆனால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கும், மாநில உள்துறைக்கும் தொடர்பு இல்லை. சிலரது தலையீட்டின் காரணமாகவே எனக்கு விவரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. எனவே, நான் கோரிய விவரங்களைத் தரும்படி காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு தமது மேல்முறையீட்டில் யசோதா பென் தெரிவித்துள்ளார்.
மேஹ்ஸானா மாவட்டம் ஊஞ்சா நகரில் தனது சகோதரருடன் யசோதாபென் வசித்து வருகிறார். அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் உள்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications