ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை
வாராணசி: ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். அங்கு நடைபெற்ற "கங்கை ஆர்த்தி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் மோடி பேசுகையில்,

உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் உணவு, காற்று போன்ற உயிர்க் காரணிகளைக் காட்டிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உறவு மிகவும் அவசியமானது. அதேபோல், ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவும் மிகவும் மகத்தானது. நீண்டகால பாரம்பரியமிக்க இந்த உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுவடையும்.
ஜப்பானின் க்யோட்டோ நகரத்துக்கும், இந்தியாவின் வாராணசி நகரத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் டெல்லிக்கு கிளம்பி சென்றனர். முன்னதாக கங்கை ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய உத்திரப்பிரேதேச அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
My gratitude to UP Govt, officials & everyone who worked towards making today's Varanasi visit memorable & showing the city to PM @AbeShinzo
— Narendra Modi (@narendramodi) December 12, 2015 -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications