மோடி தனது தவறை உணர்ந்து வருந்த வாய்ப்பளிக்க வேண்டும்: நாராயணமூர்த்தி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது தவறை உணர்ந்து வருந்த அனுமதிக்க வேண்டும் என்று இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தான் செய்த தவறை உணர்ந்து வருந்த ஒருவர் தயாராக இருந்தால் நாம் அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும். இல்லை என்றால் இது குறித்து நாம் பேசிக் கொண்டே தான் இருப்போம்.(குஜராத் கலவரம் குறித்து மோடியை பற்றி பேசுகிறீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று சொல்வது போன்று தலையை மட்டும் அசைத்தார்.)
நீதிமன்றம் அவருக்கு எதிராக எந்த தீர்ப்பையும் அளிக்கவில்லை. அதனால் அவர் தனது தவறை உணர்ந்து வருந்த வாய்ப்பளிக்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications