விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் மெட்ரோ ரயிலில் ஆஸி பிரதமருடன் சுற்றி செல்பி எடுக்கும் மோடி!
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புலுடன் இந்திய பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
டெல்லி: பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று நடத்திய நிர்வாணப் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதுகுறித்து வாயே திறக்காத பிரதமர் மோடி இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமருடன் மெட்ரோ ரயிலில் செல்வது, செல்பி எடுப்பது, கோயிலில் சாமி கும்பிடுவது என நேரத்தை செலவழித்து வருகிறார்.
டெல்லியில் கடந்த 14ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு நூதனப் போராட்டங்களை அறவழியில் நடத்தி வரும் விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்று மனுவை மட்டும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு திருப்பியனுப்பியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆடைகளை கலைந்து கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தினர்.

கொளுத்தும் வெயிலில் உருண்டு..
வெறும் காலுடன் நடக்க முடியாத டெல்லி சாலையில் வெற்றுடம்புடன் சக விவசாயிகளுக்காக அவர்கள் உருண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளது.

ஆஸி. பிரதமருடன் சுற்றும்..
இந்நிலையில் இதுவரை விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடி, தமிழக விவசாயிகள் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி நேரத்தை செலவழித்து வருகிறார்.

மெட்ரோ ரயிலில் செல்பி
4 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமரும் இந்திய பிரதமர் மோடியும் இன்று டெல்லி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக மெட்ரோ ரயிலில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கோயில் பிரார்த்தனை - கொந்தளிப்பு
பின்னர் டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பிராத்தனை செய்தனர். விவசாயிகள் போராட்டத்தால் நாடே அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்னும் மவுனியாகவே எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications