மக்களிடம் வாக்குகளை பெற கருப்பு பணத்தை பயன்படுத்துகிறார் மோடி - மம்தா பானர்ஜி
கொல்கத்தா: நடைபெறும் மக்களவை தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை பயன்படுத்தி வருகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடும் சவால் கொடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கொல்கொத்தாவில் மாபெரும் பேரணியையும் மாநாட்டையும் நடத்தி காண்பித்தார். அந்த பேரணியிலும் மாநாட்டிலும் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்தன.

காங்கிரசும் அந்தப் பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டது. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியாக மாறவில்லை. அதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் சி.பி.ஐ ஐ அனுமதிக்க முடியாது என்று தீவிரமாக மறுத்தார் மம்தா, அதன் பின்னர் யோகி ஆதித்ய நாத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க முடியாது என்று தடை விதித்தார்.
இப்படி அதிரடி காண்பித்து வரும் மம்தா சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் அதாவது சீரோ தான் கிடைக்கும் என்று கிண்டலடித்தார். நேற்று மேற்குவங்க மாநிலம் சேராம்போர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவ போவது நிச்சயம். அது பாஜகவுக்கும், மோடிக்கும் நன்கு தெரிந்து விட்டது. ஆகவே தோல்வியை தழுவுவதை தவிர்க்க பல முறைகேடுகளை பாஜகவும், மோடியும் கையாண்டு வருகிறார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வைத்துள்ளார்கள். தற்போது மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக அந்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். அதோடு பல மாநிலங்களிலும் சமூக விரோதிகளையும் குண்டர்களையும் வைத்து வாக்காளர்களை மிரட்டி பணிய வைக்கின்றனர். இப்படி பணிய வைத்து பாஜகவுக்கு வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். பாஜகவின் இந்த சதி செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications