மோடிதான் பிரதமர்… ஆனாலும் நெருக்கடியை சந்திப்பார்: பீதி கிளப்பும் ஜோதிடர்கள்
சென்னை: நரேந்திரமோடி நிச்சயம் இந்தியாவின் பிரதமராவார், பாஜக கூட்டணி 333 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக 33 இடங்களில் வெல்லும் என்று கணித்து கூறினர் ஜோதிடர்கள்.
ஜோதிடர்களின் கணிப்பு இந்தமுறை பொய்யாகவில்லை, அவர்களை சொன்னதை விட கூடுதலான இடங்களைப் பெற்று குஷியில் உள்ளனர் பாஜகவினர்.

அதேபோல அதிமுகவினரும் கூடுதல் குஷியில் இருக்கின்றனர். இந்தநிலையில் மீண்டும் ஜோதிடர்கள் தங்களின் கணிப்புகளை தட்டிவிட்டுள்ளனர்.
மோடி வழிநடத்துவார்.
இந்தியாவின் புதிய அரசை நிச்சயம் நரேந்திர மோடியே வழிநடத்தப்போகிறார். ஆனாலும் அவர் எவ்வளவு பலமான ஆட்சியை நடத்தினாலும் பிரச்சனைகளைச் சந்திப்பார்' என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நெருக்கடி உறுதி
ஹரித்வாரில் உள்ள ஜோதிட ரத்னா கௌசிக் என்பவர் தனது கணிப்பில், "அடுத்த பிரதமர் மோடிதான் என்றாலும் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல. இதனால் அக்டோபர் மாதம் அவர் பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். ஆனாலும், மோடியே பலமான தலைவராக உருவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
அசைக்க முடியாத ஆட்சி
கொல்கத்தாவில் உள்ள ஜோதிடர் ராகேஷ் ராஜ் குப்தா என்பவர் தனது கணிப்பில், "5 ஆண்டுகள் மோடியின் அரசு எந்த விதச் சிக்கல்களும் இன்றி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
நாட்டின் மதிப்பு உயரும்
மேலும், "மோடியின் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். ஜூலை 2015 முதல் நவம்பர் 2015 வரையிலும், பிறகு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் மோடி அரசு சில நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.
கடுமையான சவால்கள்
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தன் கட்சியிலிருந்தும், எதிர்கட்சியிலிருந்தும் மோடி கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றும் கணித்துள்ளார் குப்தா.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications