"மோடி எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது"- பொன்.ராதாகிருஷ்ணன் பளிச்
டெல்லி: காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்று மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து நான் சுஷ்மாசுவராஜுக்கு விளக்கம் அளித்தேன். அவரும் இதில் கவலை கொண்டிருப்பதாக கூறினார். இதற்கு நிரந்தர தீர்வு திட்டம் ஒன்றை வைத்துள்ளதாகவும், விரைவில் அதை அமல்படுத்த உள்ளதாகவும் சுஷ்மா கூறினார்.

ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாவை சந்தித்து தமிழகத்து ரயில் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். சென்னை-கன்னியாகுமரி இடையே இரட்டை பாதை அமைப்பது, மதுரை- கன்னியாகுமரி வழிப்பாதை துவங்கப்படாதது போன்ற விஷயங்களை கூறினேன். ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக அறிவிப்பது குறித்தும் வேண்டுகோள்விடுத்தேன். காவிரி பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி அதிகம் பேச முடியாது.
கர்நாடகத்தின் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் தேர்தலில் சந்தித்த தோல்வியினால் ஏதாவது செய்து அங்குள்ள மக்களின் கவனத்தை கவர நினைக்கிறார்கள், நமக்கு அந்த பிரச்சினை கிடையாது. பிரதமர் கண்டிப்பாக தமிழகத்துக்கு நீதி வழங்குவார். அவர் மற்ற பிரதமர்களை போல எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications