ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க மாட்டார்: வெங்கையா நாயுடு
ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க அவசியமில்லை எனவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பார்கள் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி: 500, 1, 000 ரூபாய் செல்லாதது என அறிவிக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க மாட்டார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, 500, 1000 ரூபாய் தடை விவாதத்தை தொடங்கியவர்கள் தற்போது அது எதிர்மறை திசையில் போய்க்கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவையில் விவாதத்தை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் கிடையாது. அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர்.
இந்த குழப்பமானது தொடரும். நாட்டு மக்களுக்கு தெரியும் யார் பதுக்கி வைப்பவர்கள், கருப்பு பணத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று. அதுபோன்று யார் மத்திய அரசுடனும், பிரதமர் மோடியுடனும் உள்ளனர் என்பதும் தெரியும். விவாதம் நடைபெற வேண்டும்.
அவையின் விதிகளின் படியும், முந்தைய நடவடிக்கைகளின் முன்னுதாரணங்களின் படியும் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, சம்பந்தப்பட்ட அமைச்சரும் மற்றவர்களும் பதில் அளித்தால் போதுமானது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications