பெற்ற குழந்தைகள் கண் எதிரில் பாலியல் சீண்டல்.. பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. பெங்களூரில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெற்ற குழந்தைகள் கண் எதிரில் பாலியல் சீண்டல்..பெண் தற்கொலை..வீடியோ

  பெங்களூர்: இரு குழந்தைகள் முன்னிலையில் சக ஊழியர் பாலியல் சீண்டல் செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பெங்களூர் எச்.ஏ.எல் நெல்லுருபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா (26). இவருக்கு குமார் என்ற கணவரும், இரு மகன்களும் இருந்தனர். சிறு வயதில் இரு மகன்கள் இருந்தனர்.

  இவர் உணவகம் சார்ந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 23 வயதாகும் மகந்தேஷ் என்பவர் இவரை பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.

  கொலை மிரட்டல்

  கொலை மிரட்டல்

  மேலும் வீட்டுக்கே வந்து தன்னுடன் உறவு கொள்ளுமாறு சுமித்ராவிடம் கட்டாயப்படுத்தியதாக கூறபபடுகிறது. இதுகுறித்து கணவனிடம் சொன்னால், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாக மகந்தேஷ் மிரட்டியுள்ளார்.

  பாலியல் கொடுமை

  பாலியல் கொடுமை

  சம்பவத்தன்று, குமார் வேலைக்கு போன நேரத்தில் தனது நண்பர் சதீஷ் என்பவருடன் சுமித்ரா வீட்டுக்கு வந்த மகந்தேஷ், பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அடித்து உதைத்துள்ளார்.

  தூக்கிட்டு தற்கொலை

  தூக்கிட்டு தற்கொலை

  பாலியல் சீண்டல்கள் மற்றும் அடி, உதை இதெல்லாம் அவரது இரு மகன்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதையடுத்து மனமுடைந்த நிலையில் இருந்த சுமித்ரா, அன்று இரவே, தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

  குற்றவாளி கைது

  குற்றவாளி கைது

  இதுகுறித்து சுமித்ரா தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் மகந்தேஷை கைது செய்துள்ளனர். அவரின் நண்பரை தேடுகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவகாரம் முதலிலேயே சுமித்ராவின் கணவனுக்கு சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவரது குடும்பத்தார் புலம்பினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A woman committed suicide by hanging at her home in HAL, after her colleague, came to her house and allegedly attacked and molested her in front of her children.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற