ரூ.1000 கோடி மோசடி வழக்கு: நடிகை லீனா, காதலன் சுகாஷ் மீண்டும் தலைமறைவு
பெங்களூர்: ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையான நடிகை லீனா மரியாபால், அவரது காதலர் சுகாஷ் ஆகியோர் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர்.
பெங்களூரை சேர்ந்த வாலிபர் சுகாஷ் சந்திரசேகர், கர்நாடக அரசுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து ஏராளமான தொழில் அதிபர்களை சுகாஷ் தனது மோசடி வலையில் விழ வைத்தார். இவரது காதலியும், நடிகையுமான லீனாவும் உடந்தையாக இருந்தார்.
கர்நாடக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக சப்ளை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று கூறி பெரிய தொழில் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பல கோடிகளை சுகாஷ் சுருட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக தொழில் அதிபர்கள் பலரிடம் கர்நாடக மாநிலத்தின் அரசு அதிகாரி போல சுகாஷ் பேசியிருக்கிறார். அப்போது, காதலி லீனா, தன்னை அவரது தனிச் செயலாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதற்கான போலி ஆவணங்களை இ-மெயில் மூலமாகவே சுகாசும், லீனாவும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பி ஏராளமான தொழில் அதிபர்கள் சுகாசின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல பேரீச்சம் பழ நிறுவன அதிபரிடமும் சுகாஷ் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இது போன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மோசடி வித்தைகளை அரங்கேற்றியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த லீனாவையும், சுகாசையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சுகாஷ் தப்பி விடவே லீனா மட்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் பிரபல நடிகையாகும் ஆசையில் நானும், சுகாசிடம் ஏமாந்து விட்டேன் என்று கூறினார். இதன் பிறகு கடந்த ஜூலையில் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சுகாசை டெல்லி போலீசார் பிடித்தனர். இதன் பிறகு சென்னை போலீசார் சுகாசை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இங்குள்ள மோசடி வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வந்த சுகாஷ், லீனா இருவரும் தற்போது தலை மறைவாகி விட்டனர். 2 பேரும் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications