அணை உடைப்பில் தப்பிய பெண்.. 43 ஆண்டுக்கு பின் காவு வாங்கிய மச்சு ஆறு.. மோர்பி விபத்தில் ஒரு சோகக்கதை
காந்திநகர்: குஜராத்தில் 43 ஆண்டுகளுக்கு முன்பு மச்சு ஆற்றின் அணை உடைந்த கோர விபத்தில் தப்பிய பெண், இந்த முறை மோர்பி பால விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
மச்சு ஆற்றின் கோரப்பசியில் இருந்து ஒருமுறை தப்பித்தாலும், மறுபடியும் அதே ஆறு காத்திருந்து அவரை விழுங்கி விட்டதாக அவரது கிராமத்து மக்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
விதி வலியது என்பதை நிரூபிக்கும் விதமாக நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் அனைவரையும் வியப்பிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சுனாமியாக மாறிய மச்சு ஆறு
குஜராத் மாநிலம் மோர்பி நகரைச் சேர்ந்தவர் மும்தாஜ் மக்வானா (62). இவருக்கும், ஹபீப் என்பவருக்கும் கடந்த 1979-ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற்றது. அப்போது மும்தாஜுக்கு 19 வயது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக மோர்பியில் பாயும் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகஸ்ட் 11-ம் தேதி நள்ளிரவு உடைந்தது. இதனால் மோர்பி மற்றும் அதன் சுற்று கிராமங்களில் ஒரு சுனாமியை போல ஆற்று வெள்ளம் பாய்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளை சூறையாடியது.

உயிர்பிழைத்த மும்தாஜ்..
இந்த கோர விபத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகில் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக இந்த மச்சு ஆறு அணை வெடிப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மச்சு ஆறுக்கு சற்று தொலைவிலேயே இருந்த மும்தாஜ் மக்வானாவும், அவரது கணவர் ஹபீபும் உயிர் பிழைத்தனர். அந்த சமயத்தில் மும்தாஜ் கர்ப்பிணியாக இருந்துள்ளார். வீட்டின் கூரையில் ஏறிக்கொண்டதால் மச்சு நதியின் கோரத் தாண்டவத்தில் இருந்து அவர்கள் தப்பி பிழைத்துள்ளனர்.

ஆற்றுக்கே செல்லவில்லை..
அந்த சம்பவம் முதலாகவே மச்சு ஆறுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் மும்தாஜ். அந்த அளவுக்கு அச்சம்பவம் அவருக்கு பயத்தை கொடுத்துவிட்டது. மேலும், தற்போது விபத்துக்குள்ளான மோர்பி கேபிள் பாலத்தின் மீதும் அவர் இத்தனை வருடங்களாக சென்றது கிடையாது எனக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் எவ்வளவு வலியுறுத்தினாலும் அவர் அங்கு செல்லவில்லை. இவ்வாறு 43 ஆண்டுகளாக மோர்பி நதியை பார்க்காமலேயே இருந்துள்ளார் மும்தாஜ்.

வலிய வந்து அழைத்த விதி..
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதுப்பிக்கப்பட்ட மோர்பி கேபிள் பாலத்தை பார்ப்பதற்காக மும்தாஜின் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் செல்ல தயாராகி உள்ளனர். ஆனால், மும்தாஜ் அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார். யார் எவ்வளவோ கூறியும் மும்தாஜ் மோர்பி பாலத்திற்கு வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால், அவரது பேரப்பிள்ளைகள் தொடர்ந்து கூப்பிட்டதால் தானும் வர சம்மதித்தார் மும்தாஜ். அதன்படி, அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்தது.

"பழிதீர்த்த மச்சு ஆறு.."
இதில் மும்தாஜின் கணவர், மகன் உட்பட 4 பேர் உயிர் பிழைத்த நிலையில், மும்தாஜ், அவரது மருமகள், ஒரு பேரன் என 3 பேரும் மச்சு நதியில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மும்தாஜின் மகன் தாரிக் கூறுகையில், "எனது தாயார் மச்சு நதியை அவரது வாழ்நாள் முழுவதும் பார்க்கக்கூடாது என வைரராக்கியத்துடன் இருந்தார். நாங்கள்தான் அவரை வலியுறுத்தி அழைத்துச் சென்றோம். இப்போது அவர் பயந்தது போலவே ஆகிவிட்டது. 43 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்து தப்பித்த என் தாயை மச்சு ஆறு இப்போது பழிவாங்கிவிட்டது" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications