டார்ஜிலிங்கில் காணாமல் போகும் குழந்தைகள்!

Subscribe to Oneindia Tamil

டார்ஜிலிங்: முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று டார்ஜிலிங். இங்கு சமீபகாலமாக காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் காணாமல் போவதின் பிண்ணனியில் பல காரணங்கள் உள்ளன என இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக மாயமாகும் குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்ஜிலிங் முன்னிலை....

டார்ஜிலிங் முன்னிலை....

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது, சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது.

புள்ளி விவரம்...

புள்ளி விவரம்...

டார்ஜிலிங்கில் கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் 924 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2010ஆம் ஆண்டில் 430 ஆக இருந்ததாகவும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

19000 குழந்தைகள்...

19000 குழந்தைகள்...

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரத்தின் படி, மேற்கு வங்காளத்தில் கடந்தாண்டு சுமார் 19000க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

குற்றச்சாட்டு...

குற்றச்சாட்டு...

கணக்கில் வந்துள்ளது கொஞ்சம் தான், ஆனால் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என குற்றம் சாட்டிகிறது சிஐஎன்ஐ அறிக்கை.

வேலைப்பளு...

வேலைப்பளு...

எல்லைப் பிரச்சினையால் நேபாளத்திற்குள் நுழையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேலும், கம்பெனிகளுக்கு, வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப் படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழில்....

பாலியல் தொழில்....

காணாமல் போகும் குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் வீட்டு வேலை மற்றும் பாலியல் தொழிலுக்காக கடத்தப் பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

குழந்தைத் திருமணம்...

குழந்தைத் திருமணம்...

குழந்தைத் திருமணம் மற்றும் கல்வியறிவின்மையே இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+