For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரப் பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் பலி

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னொ: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

அம்மாநிலத்தின் கெய்சர்கஞ்ச் பகுதியில் இருந்து பஸ் ஒன்று இன்று டெல்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் நூறுபேர் இருந்தனர். பரேலிமாவட்டம், உச்சசியா கிராமத்தின் அருகே, தேசிய நெடுஞ்சாலை 24ல் அந்த பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள உ.பி முதல்வர் அகிலேஷ்யாதவ், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

English summary
More than Twenty people were killed and over 50 passengers were injured when a bus fell into the ditch near Uchasiya village in Bareilly district on Wednesday morning. The ill-fated bus carrying around 100 passengers. The Uttar Pradesh chief minister Akhilesh Yadav while condoling the death of the passengers, has announced an ex-gratia compensation of Rs 5 lakhs for the next of kin of the deceased and Rs 50,000 each for the injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X