ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகள்.. பகீர் கிளப்பும் நாக்பூர்!.. அதிர்ச்சியில் மக்கள்!
நாக்பூர்: நாக்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக வீசி வருகிறது. நாக்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவால் 5,327 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதனால நாக்பூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,41,606 ஆக உயர்ந்துள்ளது. நாக்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

சிக்கல்
இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களை நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தால் அவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

நோயாளிகள்
இதனால் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை படுக்க வைப்பதால் கொரோனாவின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே நோயாளிகள் கருதுகிறார்கள். இதுகுறித்து மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் அவினாஷ் கவாண்டே கூறுகையில், இது நடக்கக் கூடாது. எனினும் இது நடக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நகர்ப்புறம்
நாக்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள நகர்ப்புற, ஊரக மாவட்டங்களில் இருந்து மட்டும் நோயாளிகள் வருகை தருவது மட்டுமல்லாமல் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களை நாங்கள் படுக்கை கிடைக்கும் வரை காத்திருக்க வைக்க முடியாது. இதனால் அவர்களது ஆக்ஸிஜன் அளவு கடுமையாக பாதிக்கும்.

வார்டு
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மட்டுமே இது நடைபெறும், மற்ற நேரங்களில் இது போன்று நடைபெறாது. ஒரே படுக்கையில் இருவர் படுத்திருப்பது என்பது வெறும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே. அவர்களுக்கு முதலில் ஆக்ஸிஜன் கொடுப்போம். அதன் பின்னர் வார்டுகளுக்கு மாற்றிவிடுவோம்.

ஆக்ஸிஜன்
ஒரே நேரத்தில் 40 நோயாளிகள் வந்துவிட்டால் அவர்களை வார்டுகளுக்கு மாற்றுவது சிரமமான காரியம் ஆகும். அதனால்தான் ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து அவர்கள் இயல்பாக சுவாசித்த பின்னர் வார்டுகளுக்கு மாற்றுகிறோம் என்றார் அவினாஷ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications